அஜித்தின் விவேகம் ரிலீஸ் அறிவிப்பு

vivegam

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கெரியாவில் எடுப்பதற்கு படக்குழு செல்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் எந்த தேதியில் வெளியிடலாம் என்ற ஆலோசனையில் உள்ளது.

தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி அல்லது அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளிவர வாய்ப்புள்ளது.மேலும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 10 அல்லது ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்த படம் வெளிவருவது உறுதி.

சிவாவின் பிரமாண்டமான இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

ரசிகர்களுக்கு தலை இன்பஅதிர்சியை எந்த தேதியில் கொடுக்க  போகிறார் என்று பார்ப்போம்.