அம்மாடியோவ்!!! இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் 450 மில்லியன்

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் மேலை நாட்டிற்கு இணையாக நாமும் இணையத்தை அதிக அளவில்அதன் உதவியை நாடுகிறோம். இளைய தலைமுறை முதல் முதியோர் வரை அனைவரும் இணையத்தின் பயன்பாட்டை அதிகம் தெறித்து வைத்துள்ளனர்.

இணையத்தினை மையப்படுத்தியே நமது வாழ்வானது அமைந்துவிட்ட சூழலில்,மனித வாழ்வின் அன்றாட தேவைகள் முதல் அத்தியாவசிய தேவைகள் வரை அனைத்திற்கும் நாம் இணையத்தினை பெருமளவில் சார்ந்திருக்கிறோம். அதுமட்டும் இன்றி சாதாரண சந்தேகம் முதல் முக்கியம் தகவல் வரை இணையத்தை  பார்த்து தெரிந்து  கொள்கிறோம். இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை எவ்ளோ  என்று ஒரு ஆய்வு  நடத்தப்பட்டது. அதில் இந்தியா மக்கள் எண்ணிக்கையை பார்ப்போம்.

இந்தியாவில் ஜூன் 2017 காலகட்டத்தில் இணைத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 450 முதல் 460 மில்லியன் வரை அதிகரிக்குமென கூறப்படுகிறது.

இணையத்தின் பயன்பாடும்,அதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கு சமூகவலைத்தளங்களும் ஓர் முக்கிய  காரணமாகும்அதுமட்டும்  இன்றி பல தகவல்களை சேகரிக்கவும் இணையம் தேவைப்படுகிறது.

செய்திகளை உடனடியாகத் தெரிந்துகொள்வதில் துவங்கி தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்தல்  மற்றும் கருத்து கேட்பதிலும்  இதர  வசதிகளினையும் வழங்குவதால் சமூக வலைத்தளங்களும் இணையத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம்.

கிராமம் மற்றும் நகர்ப்புறம் சதவீதம் :

இந்தியாவில் கிராமப்புற பகுதிகளில் இணையத்தினை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது 17 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

நகர்ப்புறங்களைப் பொருத்தமட்டில் நாள் ஒன்றுக்கு 57 சதவிகிதம் அதாவது 137.19 மில்லியன் அளவிலானோர் இணையத்தினைப் பயன்படுத்துவதாகவும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா தெரிவிக்கிறது.