இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு ‘ஆஷஸ்’ என்று பெயர். 4 ஆண்டுகள் இடைவெளிக்குள் தலா ஒரு முறை இவ்விரு நாடுகளிலும் ஆஷஸ் போட்டி நடைபெறும்.

கடைசியாக 2013-14-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ‘ஆஷஸ்’ தொடரை 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்தை தோற்கடித்தது.

இந்த தொடர் மொத்தம் 5 டெஸ்டுகளை கொண்டது. இதன்படி ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கார்டிப்பில் உள்ள சோபியா கார்டனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்விரு அணிகளும் இதுவரை ‘336’ டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 138-ல் ஆஸ்திரேலியாவும், 105-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 93 டெஸ்ட் டிரா ஆனது.