இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் நோக்கியா 6

உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நோக்கியா “6” ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியிடப்பட்டு ஃபிளாஷ் முறையில் விற்பனையும் செய்யப்பட்டது. எனினும் இந்த விற்பனை சீனாவில் மட்டும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் சீனாவில் மட்டும் விற்பனை செய்து வந்த நோக்கியா “6” தற்சமயம் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது.  இதே போல் பல்வேறு நாடுகளிலும் நோக்கியா “6” விற்பனைக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

 

மற்ற நாடுகளை போன்றே இந்தியாவிலும் நோக்கியா “6” விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் இவை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பிரபல இணையதள விற்பனை தளமான ஈபேவில் நோக்கியா “6” கிடைக்கும் என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் நோக்கியா “6” “ரூ.32,440க்கு” விற்பனை செய்யப்படுகிறது என்றும் சீனாவில் இந்திய மதிப்பில் “ரூ.16,000”  என்றும் கூறப்படுகிறது. அதன் படி சீனாவைவிட இந்தியாவில் நோக்கியா 6 இருமடங்கு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

 நோக்கியா 6-ன் விரிவான குறிப்புகள்:  

பரிமாணங்கள் (Dimensions) (mm)      : 154.00 x 75.80 x 7.85 

Weight (g)     : 167.00 

பேட்டரி கேபாஸிட்டி (Battery capacity) (mAh)       : 3000 

ஸ்க்ரீன் சைஸ் (Screen size) (inches)      : 5.50 

ரேம் (RAM)       : 4GB 

Operating System(OS)         : Android 7.0 

பின் கேமரா (Rear camera)      : 16-megapixel 

செல்பி கேமரா (Front camera)       : 8-megapixel         

இன்டர்னல் ஸ்டோரேஜ் (Internal storage)    : 64GB 

விரிவாக்க ஸ்டோரேஜ் (Expandable storage)      : Yes 

விரிவாக்க ஸ்டோரேஜ் வகை (Expandable storage type)        : microSD 

Expandable storage up to (GB)    :128 

Resolution       : 1080×1920 பிக்சல்ஸ் (pixels) 

பிக்சல்ஸ் பெர் இன்ச் (Pixels per inch (PPI))     : 403