ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தேர்வு

சர்வதேச ஹாக்கி லீக் அரையிறுதி போட்டிகள் நடந்து வருகின்றன, இதில் ஜப்பான் அணியுடன் இந்திய மகளிர் ஹாக்கி அணி மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய கோல்கீப்பர் சவீதா தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி அணியை வெற்றி நோக்கி கொண்டு சென்றார்.

36 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி, 1980-க்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் இந்திய வீராங்கனைகளின் கனவு நனவானது என்று அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.