கனடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஜுவாலா – அஸ்வினி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

இப்போட்டியில் இந்த ஜோடி நெதர்லாந்தின் செலீனா பீக் – ஈப்ஜெ முஸ்கென்ஸ் ஜோடியை 21-19 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது.

2012 லண்டன் ஒலிம்பிக்குக்குப் பிறகு மீண்டும் ஜுவாலாவும் அஸ்வினியும் ஜோடி சேர்ந்து சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.