கோடக் மீண்டும் பிலிம்க்கு திரும்புகிறது

film role

தொழில்நுட்ப துறை நாள்தோறும் வளர்ச்சி அடைந்து  கொண்டே இருக்கிறது.மக்களும் தொழில் வளர்ச்சியை பெரிதும் விரும்பின்றனர்.ஆனால் உறவு பூர்வமான விஷயங்களில் மக்கள் பெரிதும் பழமையானதை ரசிக்கின்றனர்.

அந்த வகையில் கோடக் மீண்டும் பிலிம்க்கு  மீண்டும் மாறப்போவதாக அறிவித்துள்ளது. அந்த செய்துகுறிப்பில் குறிப்பாக தங்களது எக்டாகுரோம் ஃபிலிமை திரும்ப தயாரிக்க உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் அதை சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

கோடக் உற்பத்தியை 2012-ம் ஆண்டிலேயே  நிறுத்திவிட்டது. இந்த ஃபிலிம் பயன்படுத்தும்போது கிடைக்கும் படக்காட்சிகள் சிறப்பாகவும், ஃபிலிம் நீண்ட நாள் வீணாகாமல் இருக்கும் என்பதாலும், அழிய பொக்கிஷமாக உள்ளதாகவும் பெரிதும் விரும்புகின்றனர்   இதைப் பயன்படுத்தி படம் எடுத்த புகைப்பட கலைஞர்கள் இதைத் திரும்ப தயாரிக்க வேண்டும் என கோரியதாக கோடக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனால் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிப்பதற்க்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. விரும்பி கேட்டுக்கொண்டதற்காக மிக விரைவில் உற்பத்தியில் இறங்க போவதாக கோடக் நிறுவனம் கூறியுள்ளது