கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி : பெரு 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது

தென் அமெரிக்காவின் புகழ்பெற்ற கால்பந்து போட்டியான கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பெரு அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று நடைபெற்ற காலிறுதியில் பெரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவைத் தோற்கடித்தது. பெரு ஸ்டிரைக்கர் பாலோ கெரேரோ ஹாட்ரிக் கோலடித்தார்.

கெரேரோ தலா மூன்று கோல் அடித்து பெரு அணியை வெற்றி வாகை சூட செய்தார். பொலிவியா அணியின் மார்செலோ மொரினோ ஒரு கோல் அடித்தார்.

வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ள  அரையிறுதி போட்டியில் சிலியை சந்திக்கிறது பெரு.