கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பெனால்டி முறையில் பிரேசிலை தோற்கடித்தது பராகுவே

சிலியில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் கான்செப்சியான் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பிரேசிலும், பராகுவே அணியும் மோதின.

இப்போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தி பராகுவே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று பிரேசிலை வெளியேற்றியது பராகுவே.

முதல் அரையிறுதிப் போட்டியில் பெருவும், சிலியும் இன்று மோதுகின்றன. 2-வது அரையிறுதியில் அர்ஜெண்டினா அணியுடன்  நாளை மோதுகிறது பராகுவே.