சம்மர் கார்ன் அண்ட் டொமாடோ பாஸ்தா

தேவையான பொருட்கள்:

1/2 கிலோ பாஸ்தா
2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
2 பூண்டு கிராம்பு தூளாக்கப்பட்டது
2 கப் தக்காளி(நறுக்கியது)
2 தேக்கரண்டி வெண்ணெய்
3 ப்ரெஷ் கார்ன்
1/4 கப் துளசி இலைகள்(நறுக்கியது)
உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் நீரில் உப்பு போட்டு பாஸ்தாவை அடுப்பில் ஒரு கொதி வரும் வரை வேக விடவும்.

இதற்கிடையில், ஒரு வாணலியில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் நன்றாக சூடு வந்த பின் பூண்டு-கிராம்பு கலவை மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். தக்காளி நன்றாக மசியும் வரை கிளறி பின் கார்னை சேர்க்கவும். சற்று வேகமாக தீயை உயர்த்தி கார்ன் பொன்னிறமாக நிறம் மாறும் வரை 5 நிமிடம் வேக விடவும். தேவைக்கேற்றார் போல் உப்பு சேர்க்கவும்.

இத்துடன் வேகவைத்த பாஸ்தா, வெண்ணெய் மற்றும் துளசி சேர்த்து கிளறி பரிமாறவும்.