சி3 வெற்றி – ஹரிக்கு பரிசளித்த சூர்யா

சிங்கம்3 படத்தின் வெற்றிக்காக இயக்குநர் ஹரிக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் சூர்யா. சூர்யா -ஹரி கூட்டணியில் உருவான சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான சி3 பிப்ரவரி 9 அன்று வெளியிடப்பட்டது. அனுஷ்கா,ஸ்ருதிஹாசன் என இரு ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்வதால் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுவரை 100 கோடிக்கும் அதிகமாக  வசூல் ஆகியிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சூர்யா டொயோட்டா ”Fortuner” காரை இயக்குநர் ஹரிக்கு பரிசாக வழங்கி உள்ளார். கடந்த வருடம் பசங்க 2 வெற்றிக்காக இயக்குநர் பாண்டிராஜ்க்கு “Maruti Suzuki s cross” காரை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.