ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு கேப்டனாக ரஹானே தேர்வு

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஹானே அறிவிக்கப்பட்டுள்ளார். தோனி , விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஜூலை 7-ந்தேதி ஜிம்பாப்வேக்கு புறப்படுகிறது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் தலைமையிலான குழு, இந்திய அணியை தேர்வு செய்துள்ளது.