ஜியோனி இ-லைஃப் இ8 ஸ்மார்ட்போன் அறிமுகம்

சென்ற வாரம் சீனாவில் நடைபெற்ற அறிமுக விழாவில் ஜியோனி இ-லைஃப் இ8 ஸ்மார்ட்போன் அறிமுகபடுத்த பட்டது. இந்த போன் சீனாவில் ஜூலை 15 முதல் விற்பனைக்கு அமலாக உள்ளது. இதன் விலை 3,999 சீன யுவான்கள் ஏறக்குறைய இதன் இந்திய மதிப்பு ரூ.40,000 ஆகும்.

ஜியோனி இ-லைஃப் இ8 ஆன்டராயிடு 5.0 லாலிபாப் வகையை சேர்ந்த அமிகோ 3.1 இயங்குதளம் கொண்ட இரட்டை சிம் உள்ள ஸ்மார்ட்போன். இதன் சிறப்பம்சம் 24 மெகாபிக்சல் கொண்ட பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா.

மேலும் ஆட்டோ ஃபோகஸ், கைரேகை ரீடர், ஃபிளாஷ் LED, வீடியோ ரெகார்ட், ஜூம் லென்ஸ் போன்ற நவீன வசதிகளும் உள்ளது. இத்துடன் 1600×2560 பிக்சல் எச்டி 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 3ஜி ரேம் மற்றும் 3520mAh பாட்டரி போன்ற வசதிகளும் கொண்டுள்ளது.