ஜியோவின் அடுத்த புரட்சி என்னவென்று தெரியுமா?

வரம்பற்ற டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகளை வழங்கி இந்தியா தொலைத்தொடர்பு துறையில் ஒரு விலைக்குறைப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் “டிடிச்” விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இலவச டேட்டா, வாய்ஸ் கால்கள் என இலவசமாக வாரி வழங்கிய ஜியோ நிறுவனம் அதன் புதிய பயனர்களுக்காக “6” எனத்தொடங்கும் மொபைல் எண்கள் ஒதுக்க அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. தொலைத் தொடர்புத் துறை (DOT) ஆனது இதுபோன்றதொரு அனுமதியை முதல் முறையாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு மட்டுமே வழங்கியுள்ளது.

அசாம், ராஜஸ்தான், மற்றும் தமிழ்நாட்டில் இந்த “6” சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகள் வழங்கப்பட உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் “7” சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகளும், கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிராவிற்கு “8” சீரிஸ் எம்எஸ்சி குறியீடுகள் வழங்கப்பட உள்ளது

ரிலையன்ஸ் ஜியோ கூற்றின்படி ராஜஸ்தானில் “60010-60019″ என்ற எம்எஸ்சி குறியீடுகளும், அசாமில் “60020-60029” என்ற எம்எஸ்சி குறியீடுகளும் மற்றும் தமிழ்நாட்டில் “60030-60039” எம்எஸ்சி குறியீடுகளும் கிடைத்துள்ளது.

இந்த “6” சீரிஸ் மொபைல் எண்களை அறிமுகம் செய்வதின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினால் மாநிலங்களை அடிப்படையாக கொண்ட சேவைகளில் முன்னோக்கி செல்லமுடியும் என தெரிகிறது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ வெளியுட்டுள்ள அறிக்கையில் இன்னும் ஒரு மில்லியன் புதிய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவே இந்த திட்டம் என்றும் கூறப்பட்டுள்ளது.