ஜி.வி. பிரகாஷ் படங்களுக்கு இசையமைக்கும் இளையராஜா, ரஹ்மான்!

ஒரே சமயத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் இருவேறு படங்களுக்கு இளையராஜாவும் ரஹ்மானும் இசையமைக்கிறார்கள்

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் 9 பாடல்கள்

அடுத்ததாக பாலா படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி. பிரகாஷ். இந்தப் படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

ஒரே சமயத்தில் இருபெரும் இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படங்களில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ் அதிர்ஷ்டக்காரர்தான் என்று கோலிவுட்டில் பேசி கொள்கிறார்களாம்.