ஜீன்ஸ் இறுக்கமாக அணிவதால் ரத்த ஓட்டம் பாதிப்படைகிறது

ஆஸ்திரேலியாவில் 35 வயது மதிக்கதக்க பெண்மணி இறுக்கமான ஜீன்ஸ் அணிந்ததால் கால்கள் உணர்வின்றி மயக்கமடைந்துள்ளார்.

நீண்ட நேரம் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து கால்களை மடக்கி வைத்து இருந்ததால் கால்களின் நரம்புகள் உணர்வு இழந்து மயக்கமாகி உள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டுள்ளது.

அவருடைய கால்கள் வீங்கி இருந்ததால் ஜீன்ஸ் வெட்டி எடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் இறுக்கமாக இருந்ததால், ரத்த ஓட்டத்தை பாதித்ததாகவும் நரம்புகள் பலவீனமாக இருந்ததாகவும் கூறினர்.

இதனையடுத்து இறுக்கமாக ஜீன்ஸ் அணிவதால் நரம்பியல் பாதிப்பு நோய் உண்டாவதாக கண்டறிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நாகரீக ஆடையான ஜீன்ஸ் அனைவராலும் விரும்பி அணியப்பட்டு வரும் நிலையில் அது  உயிருக்கே ஆபத்தாக அமையும் என்ற செய்தி ஜீன்ஸ் விரும்பிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது !!!!

Tagged with:     ,

Post your comments

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.