நயன்தாரா நடித்து வரும் புதிய படம்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து வருகிறார். நயன்தாரா கலெக்டராக நடிக்கும் படம் ‘அறம்’

ஒரு கிராமத்தின் தண்ணீர் தேவைக்காக கலெக்டர் ஒருவர் களமிறங்கும் கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாராவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அடுத்தக்கட்டமாக டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டிரைலர் தயாராகி வருவதாகவும், விரைவில் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.