பாகுபலி இரண்டாம் பாகத்தில் ஷாருக்கான்?

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஜூலை 2015 -ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் என பல நடிகர் நடிகைகள் நடித்தனர். அதுமட்டும் இல்லாமல் இப்படம் வசூல் ரீதியாகவும்  பெரும் சாதனைப் படைத்தது.

இரண்டு பாகமாக தொடங்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்கள் இந்த பாகத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது இந்த படத்தில் “பாலிவுட் நடிகர் ஷாருக்கான்” நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரபாஸுக்கும், ராணா டகுபதிக்கும் இடையே நடக்கும் போரில் சமாதான தூதுவராக சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக செய்தி எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இருப்பினும், படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து இந்த செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.

‘பாகுபலி -2’ வருகிற “ஏப்ரல் 28-ந் தேதி” வெளியாக இருப்பதாக ஏற்கெனவே படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.