பார்வையற்றவர்களுக்கு உதவும் ஒரு அபாரமான செயலி

செல்போன்களின் பயன்பாடுகள் எந்த அளவுக்கு மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டதோ அதேபோல் செல்போன் சிறப்பாக இயங்குவதற்கு நாள்தோறும் புதுப்புது செயலிகள் உருவாகி வருகின்றன. நம்முடைய ஒவ்வொரு வேலையையும் இந்த செயலிகள் எளிமையாக்கி வருவதால் இந்த தொழில்நுட்பம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் சந்தையில் ஒரு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபாலி(Aipoly Vision) என்று அழைக்கப்படும் இந்த செயலியை பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுத்தால் அவர்கள் தங்களுக்கு எதிரே இருக்க கூடிய பொருள் என்ன என்பதை அறிய முடியும். அதுமட்டுமின்றி  தாங்கள் அறிய விரும்பும் பொருளின் பெயரை மொபைல் குரலால் சொல்ல அதை அவர்கள் கேட்ட முடியும்.

இந்த ’ஐபாலி’(Aipoly Vision) செயலி எதிரே இருக்க பொருளை ஸ்கேன் செய்து அதனுடைய பெயரை துல்லியமாக குரலில் கொடுக்கும் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி இப்போதைக்கு 7 மொழிகளில் பொருட்களின் பெயரை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள விரைவில் இன்னும் அதிக மொழிகள் இதில் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த செயலிக்கு பார்வையற்றவர்கள் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளனர். மேலும் இந்த செயலில் தற்போதைக்கு ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட செல்போனுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருக்ககூடிய விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதள செல்போனிலும் இயங்கும் வகையில் மாற்றப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Download from here https://itunes.apple.com/us/app/aipoly-vision/id1069166437?mt=8&uo=8&at=11l4LS