பேஸ்புக்கில் வரப்போகிறது “டிஸ்லைக்” பட்டன்..!

பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனில் “டிஸ்லைக் ” பட்டன் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல ஆண்டுகாலமாக வெறும் லைக் பட்டனை மட்டுமே கொண்டிருந்த பேஸ்புக்கில், கடந்த ஆண்டு ‘ரியாக்‌ஷன் பட்டன்ஸ்’ என்ற பெயரில் பல்வேறு வகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு பயனாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனில் ’டிஸ்லைக்’ பட்டன் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான ஸ்மைலியை பேஸ்புக் மெசஞ்சரில் அந்நிறுவனம் சோதித்து வருகிறதாம். இந்த சோதனை வெற்றி பெற்றால், அடுத்த சில மாதங்களில் பேஸ்புக்கிலும் டிஸ்லைக் பட்டனை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம்.

கடந்த பிப்ரவரி மாதம் ரியாக்‌ஷன்ஸ் பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை பேஸ்புக் நிறுவனம் கொண்டாடியது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 300 பில்லியன் பேர் ரியாக்‌ஷன் பட்டனை பயன்படுத்தியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.