மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இயங்குதளம் யுஎஸ்பி டிரைவ் மூலம் விற்பனை அறிமுகம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இயங்குதள பதிப்பை யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. விண்டோஸ் இயங்குதளம் குறுந்தகடு வழியாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்பொழுது யுஎஸ்பி பிளாஷ் டிரைவ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

இச்சேவை விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 10 ப்ரோ பதிப்புகளில் அறிமுகமாக உள்ளது. 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகள் இரண்டும் விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 10 புரோ ஃபிளாஷ் டிரைவ்-ல் இருக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 பதிப்பின் விலை $119 டாலர் என்றும், விண்டோஸ் 10 புரோ $199 டாலர்கள் என்றும் நிர்ணயித்துள்ளது.

பயன்பாட்டிலுள்ள விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முன்னுள்ள இயங்குதளங்களில், இலவசமாக விண்டோஸ் 10 ‘இணையம் மூலம்’ நேரடியாக  அப்கிரேட் செய்யப்படும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.