ரிலையன்ஸ் ஜியோவின் கேப்ஸ் மிக விரைவில்

reliance cabs

ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவைகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தது. தற்போது 2017 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ ஒரு பயன்பாட்டு சார்ந்த டாக்ஸி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.!

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த டாக்ஸி சேவை ஆரம்பத்திலேயே ஒரு கிக்ஸ்டார்ட் சேவையாக இருக்கும் வண்ணம் சுமார் 600 கார்கள் இதில் களம் இறக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சேவை ரிலையன்ஸ் ஜியோ கேப்ஸ் என்று அழைக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதனை தொடர்ந்து சேவையை விரிவுப்படுத்த போகிறது என்று நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதற்காக ஓட்டுனர்கள் மாத சம்பளத்தையும், கூடுதல் நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு ரூபாய் 500 கூடுதலாக கொடுக்க போவதாகவும் செய்திகள் வெளிவந்து உள்ளது.

முக்கிய சிறப்பு அம்சமாக 4ஜி சேவை அனைத்து கார்களிலும் இணைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த சேவை மிக விரைவில் சென்னையில் ஆரம்பிக்க போவதாக தெரிகிறது. இப்போது இந்த திட்டம் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் தொடங்கலாம் ஆனால் அடுத்த ஆறு மாதங்கள் வரை பொறுத்த பின்பே இதன் வணிக ரீதியிலான சேவை தொடங்கும் என்றும் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.