வாட்ஸ் அப் செயலியில் இனி வீடியோ, புகைப்படம் , GIF போன்றவற்றையும் உங்களுடைய ஸ்டேட்டஸாக வைக்கலாம்

whatsapp update

வாட்ஸ் அப் நாளுக்கு நாள் தனது பயனர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகம் செய்தும் , மேம்படுத்தியும் வருகிறது.

இதுவரை வாட்ஸ் அப்பின் ஸ்டேட்டஸ்ஸாக டெக்ஸ்டை மட்டுமே வைக்க முடிந்தது. இனி வாட்ஸ் அப்பின் ஸ்டேட்டஸாக புகைப்படங்கள் , GIF மற்றும் வீடியோக்களை வைக்க முடியும்.

மேலும் இந்த ஸ்டேட்டஸ்களை 24 மணி நேரத்தில் தானாக மறைத்து விடும். ஸ்டேட்டஸை குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்வையிடும் வகையில் அதனுடைய பிரைவசியில் மாற்றிக்கொள்ள இயலும்.

இதனால் வாட்ஸ்  அப் பயனாளர்கள் அதிகரித்து உள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

Tagged with:     ,