விம்பிள்டன் டென்னிஸ் முதல் நாள் தொடக்கச் சுற்றில் ஜோகோவிக், செரீனா வில்லியம்ஸ் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் நேற்று தொடங்கியது.

தொடக்கச் சுற்றில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிக் , கோல்ஸ்கிரெய்பரை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிக் 6-4, 6-4, 6-4 என செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா, மார்கரிடா கஸ்பர்யானை 6-4, 6-1 என வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.