வேலைக்காரன் பஞ்ச் டயலாக்

punch dialog

சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு பொருத்தமான பஞ்ச் டயலாக்குகளை சமூக இணையதளத்தில் பதிவு செய்யுமாறு படக்குழுவினர் சமீபத்தில் ரசிகர்களை கேட்டு கொண்டிருந்தனர்.

அந்த வகையில் ரசிகர் எழுதிய பஞ்ச் டயலாக் ஒன்று தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த பஞ்ச் டயலாக் இதுதான். “புயலாலும் மழையாலும் கரைகிறவன் இல்லடா, உழைப்பால மெருகேறின ஆலமரம்டா வேலைக்காரன். ஒரு ஒரு கிளையிலலும் உழைப்போட உறுதி இருக்கும், அதாண்டா வேலைக்காரன்”.

ரசிகர் எழுதிய பஞ்ச் டயலாக் படத்தில் சேர்க்கப்படுகிறதா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் வெள்ளித்திரையில்?