1.5 மில்லியன் நபர்கள் கொரோனாவால் உலகளவில் பாதிப்பு – தொடரும் சோகம்

AFP நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் உலகளாவிய கொரோனா தொற்றின் பாதிப்பு 15லட்சம் நபர்களை கடந்துவிட்டது.

சீனாவில் தொடங்கிய இந்த நோயானது தற்போது அமெரிக்காவை புரட்டி போட்டு உள்ளது.

இதுவரை அமெரிக்காவில் 4,32,000 பேர் பாதிக்க பட்டும் மேலும் 14,000 பேர் மரணம் அடைந்தும் உள்ளனர்.

நியூயார்க் கவர்னர் அன்றெவ் குஓமோ அணைத்து கொடிகளையும் அரை கம்பத்தில் பறக்க விட சொல்லி உள்ளார். அங்கு மட்டும் ஒரே நாளில் 700கும் மேற்பட்டோர் உயிர் இழந்து உள்ளனர்.

ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐரோப்பாவில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. அங்கு புதிதாக அதிகமா பாதிக்க படுகிறன்றனர்.

சீனாவில் பாதிப்பு குறைந்து உள்ளது, தற்போது சில மாகாணங்களை அது திறந்து விட்டு உள்ளது.

Tagged with: