104 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி37

இந்திய விண்வெளி ஆய்வுத்துறையான இஸ்ரோவின் புதிய மைல்கல்லாக ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை தாங்கிச் செல்லும் பிஎஸ்எல்வி – சி37 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட்டு புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஏழு நாடுகளைச் சேர்ந்த 104 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள்கள் சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கடற் கொள்ளை ஆகியவற்றை கண்காணிக்க பயன்படுத்தப்பட உள்ளன.

104 செயற்கைகோள்களின் மொத்த எடை 1378 கிலோ. புவியில் இருந்து 550 கி.மீ தூரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுவட்ட பாதையில் எல்லா செயற்கைகோள்களும் நிலைநிறுத்தப்பட உள்ளன. இதில் கார்டோசாட் 2 தான் முதன்மையானது. இதன்  எடை 714கிலோ.

இந்தியாவுக்கு சொந்தமான செயற்கைகோள்கள்:

  1. கார்டோசாட்
  2. ஐஎன்எஸ் 1ஏ
  3. ஐஎன்எஸ் 1 பி

இதற்கு முன் 2014 ம் ஆண்டு ரஷ்யா ஒரே நேரத்தில் 33 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பியது தான் சாதனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் 2016 ம் ஆண்டு, ஒரே நேரத்தில் 20 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி, புவி சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது தான் உச்சபட்ச சாதனை ஆகும் .

வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் http://www.ndtv.com/video/news/news/isro-makes-history-104-satellites-in-1-launch-a-world-record-449287