15.5 இன்ச் ஸ்க்ரீனுடன் அசுஸ் ரோக் ஜிஎல்552 மடிக்கணினி ரூ.70,999ல் அறிமுகமாகியுள்ளது

கடந்த வியாழக்கிழமையன்று அசுஸ் ரோக் ஜிஎல்552 மடிக்கணினி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இ-காமர்ஸ் வலைதளங்களில் கருப்பு மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது

விண்டோஸ் 8.1 இயங்குதள வசதி கொண்ட இந்த ரோக் ஜிஎல்552, 15.6 இன்ச் எச்டி ஸ்க்ரீன், 8ஜிபி ரேம் மற்றும் இன்டெல் கோர் i7 HQ ப்ராஸசர் போன்ற சிறப்பம்சங்கள் கொண்டு அதிக கிராபிக் கேம்ஸ் மற்றும் அப்ளிகேஷன்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இண்டெல் எச்டி கிராபிக்ஸ் 3600 இத்துடன் ஒருங்கினைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல் வெப் கேம், 2.5 இன்ச் HDD, ஆப்டிகல் டிரைவ் போர்ட், விளையாட்டு கணினிக்கான இதர் நெட், ப்ளுடூத், wi-fi, ஹெட்போன் மற்றும் மைக் காம்போ, ஸ்பீக்கருடன் கூடிய SD-கார்டு ரீடர் போன்ற வசதிகளும் உள்ளது. இக்கணினி 2.6 கிலோ எடை மற்றும் 48WHr 4 செல் லி-அயன் பேட்டரி கொண்டுள்ளது.

அசுஸ் ரோக் ஜிஎல்552 மடிக்கணினி விளையாட்டிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சம் சோனிக்மாஸ்டர் மற்றும் ஆடியோ விசார்ட் கூடிய ஆடியோ வசதி. மேலும் இதனுடன் கேம்களுக்கான ஹெட்செட் மற்றும் சுட்டி இணைக்கப்பட்டுள்ளது.

ரோக் ஜிஎல்552யை அறிமுகப்படுத்துகையில் அசுஸ் தெற்கு ஆசிய கணினி அமைப்பு வர்த்தக குழு மேலாளர் பீட்டர் சாங் பேசியதாவது “இக்கணினியை அறிமுகபடுத்துவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம். மேலும் ரோக் ஜிஎல்552 விளையாட்டிற்காகவும் அனைவராலும் விரும்பி ஈர்க்கபட கூடிய வகையில் அழகிய டிசைன்களில் வடிவமைக்கபட்டுள்ளது”.