மது அருந்தி வாகனம் ஓட்டினால் 15நாள் சிறை

drunk drivning is punishable offence

தமிழக அரசு அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற சட்டத்தை சற்று நாள் முன்பு அமல் படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போழுது போதையில் வாகனம் ஓடினாள் 15நாள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். சாலை பாதுகாப்புக்கான உச்ச நீதிமன்ற குழு ‘போதையில் வாகனம் ஓடுதல், அதிவேகம், அதிகம் பாரம் ஏற்றுதல், சிக்னல் விதிமீறல்’ இதுபோன்ற குற்றச்சாட்டில் சிக்குவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரை 14லட்சம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 16கோடி ரூபாய் அபராதமாக போலீஸார் வசூலித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறியது என்னவென்றால் இது போன்றகுற்றச்சாட்டில் சிக்குவோர் ஓட்டுநர் உரிமத்தை தற்காலியமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்ய வேண்டும், இதனை தொடர்ந்து 15நாட்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என அறிவித்துள்ளனர். இதுபோல அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம் என்ற சட்டம் அமலுக்கு வந்தபின் 8,400 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்து தடுப்பு நடவடிக்கையாக இதனை அறிவித்துள்ளனர்.