சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல 20 நிமிடம்

இன்றய அவசர உலகத்தில் மக்கள் அனைவரும் அன்றாடம் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யவேண்டியுள்ளது. அதன் காரணமாக அவர்கள் பல இடத்திற்கு செல்லவேண்டியிருக்கிறது. உதாரணமாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டும் என்றால் பல மணி நேரம் பயணம் செய்யவேண்டியிருந்தது. இதன் காரணமாக தான் இந்த அவசர காலகட்டத்தில் நேரத்தை குறைப்பதற்க்காக சென்னை பெங்களூர் இடையே ஹைப்பர் லூப் (Hyperloop) எனப்படும் குழாய் வழிப் போக்குவரத்து வர இருக்கிறது.

 

ஹைப்பர் லூப் எனப்படும் குழாய் வழிப் போக்குவரத்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் மிக விரைவில் வரவிருக்கிறது. இதற்கான பணிகளை ஹைப்பர் லூப் ஒன் (Hyperloop One) என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  இதன் முதல் கட்டமாக சென்னை-பெங்களூர், சென்னை-மும்பை, சென்னை-மும்பை (பெங்களூர் வழியே), சென்னை-திருவனந்தபுரம் ஆகிய வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதில் சென்னை-பெங்களூர் செல்ல 20 நிமிடங்களும் சென்னை-மும்பை செல்ல 50 நிமிடங்களும் சென்னை-திருவனந்தபுரம் செல்ல 40 நிமிடங்களும் மட்டுமே போதும் என்றும் ஹைப்பர் லூப் ஒன் நிறுவனம் கூறியுள்ளது.

 

மேலும், மெகா வழித்தடமான மும்பை-டெல்லி இடையேயான 1317 கி.மீ. தொலைவை 55 நிமிடங்களில் கடக்கலாம் என்று அந்நிறுவனம் சொல்கிறது. இதற்கான மாதிரி வடிவ சோதனை தற்போது நடைபெற்று  வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் இந்த ஹைப்பர் லூப் வழித்தடங்கள் இந்தியாவில் அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

 

இந்த ஹைப்பர் லூப் வழிப் போக்குவரத்து பயன்பாட்டிற்க்கு வந்தால் இதில் பயணிப்பர்வர்களுக்கு பல மணி நேரம் மிச்சமாகும் என்றால் அது மிகையாகாது.

Tagged with:     ,