2024 ஒலிம்பிக் போட்டி பாரிஸில்

olympic 2024 is going to held on paris

2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற போவதாக கூறியுள்ளனர்.பெரு தலைநகர் லிமாவில் சர்வதேச ஒலிம்பி கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. இதில் நடந்த வாக்கெடுப்பில் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்த பிரான்ஸ் தலைநகரமான பாரிஸ் நகரம் தேர்தெடுக்கப்பட்டது, இதுமட்டுமின்றி 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்த அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் தேர்வு செய்யப்பட்டது.

2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் உள்ளன டோக்கியோ நகரில் நடத்த முன்பாகவே முடிவுசெய்துள்ளனர். இதனை தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டிகள் 2024ம் ஆண்டு பாரிஸிலும் 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸிலும் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tagged with:     , ,