5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 4ஜி வசதி கொண்ட லெனோவா கே3 நோட் ரூ.9,999யில் அறிமுகமாகி உள்ளது

லெனோவா கே3 நோட் (lenovo k3 note) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.9,999க்கு அறிமுகபடுத்தபட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 8 பிற்பகல் 2 மணி முதல் தொடங்குகிறது, வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

லெனோவா கே3 நோட் எல்டிஈ வசதியை கொண்டுள்ளது. இது ஆன்ட்ராயிடு லாலிபாப் 5.0 இயங்கு தளத்தில் இயக்கப்படுகிறது.

இரட்டை சிம் வசதி கொண்டுள்ள இப்போன் 1.7 ஜிகா ஹெர்ட்ஷ் ப்ராசஷர், 2ஜிபி ரேம் , 13 எம்பி பின்பக்க மற்றும் 5 எம்பி முகப்பு கேமரா, 4ஜி, ப்ளுடூத், யுஎஸ்பி, 32ஜிபி மெமரி கார்டு ஸ்லாட் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.