பட்டாசு வாங்க பான் மற்றும் ஆதார் தேவை

aadhar card and pan card number needed to buy crackers

ஜிஎஸ்டி எண் இல்லாமல் குடோனிலிருந்து பட்டாசு வாங்குவதற்கு ஆதார் மற்றும் பான் எண் அவசியம் என்று பட்டாசு நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். வருகின்ற அக்டோபர் 18ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்கிடையே இப்பொழுது பட்டாசு வாங்க இப்படி ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளனர். ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின் பட்டாசு விற்பனையாளர்களுக்கும் ஜிஎஸ்டி எண் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பட்டாசு விற்பனை செய்யும் குடோனிலிருந்து விற்பனையாளர்கள் ஜிஎஸ்டி எண் மூலம் பட்டாசுகளை வாங்கி செல்ல அறிவித்துள்ளனர். ஆனால் சில வாடிக்கையாளர்கள் மொத்தமாக தங்கள் வீட்டிற்க்கு பட்டாசு வாங்க குடோனை அணுகின்றனர் அவர்களிடம் ஜிஎஸ்டி எண்ணிற்கு பதிலாக ஆதார் மற்றும் பான் கார்ட் எண்களை வாங்கி கொண்டு பட்டாசு விற்பதாக கூறியுள்ளனர். இதனால் விற்பனையில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tagged with:     , , , ,