இந்தியாவில் பயணிப்பது கடினம் – ஆஸி. வீரர் ஜம்பா பேட்டி

adam zampa said it is difficult to travel in india

இந்தியா ஆஸ்திரேலியா அணியின் எதிரான டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 8விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வீழ்த்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பஸ்சில் கல் வீச்சு நடந்தது.

இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை அதிக அளவில் ரசிப்பதால் அவர்களால் இந்திய அணியின் தோல்வியை ஏற்று கொள்ள முடியவில்லை, அதனால் அவர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பஸ் மீது கல் வீசி மர்ம நபர்கள் தாக்கினர். இது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கூறியது என்னவென்றால் ‘கல்வீச்சு நடக்கும் பொழுது நான் அதற்க்கு அடுத்தப்பகத்திக் காதில் ஹெட்போணை மாட்டிக்கொண்டு பாடல் கேட்டபடி இருந்தேன் தீடிரென்று ஒரு பயங்கர சத்தம் ஏற்பட்டது பதறிவிட்டேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா ரசிகர்கள் எப்பொழுதும் மற்ற வீரர்களை மதிப்பவர்கள். அவர்கள் கிரிக்கெட் விளையாட்டை அதிகம் ரசிக்கிறார்கள் இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிலர் உணர்ச்சி வசப்படுகிறார்கள். இவர்களால் மற்ற ரசிகர்கள் மீது கொண்ட நல்லெண்ணத்தையும் கெடுத்துவிடுகிறது. இதனால் இந்தியாவில் பயணிப்பது கடினமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Tagged with:     , ,