சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் அருகே சிரியா மற்றும் ரஷ்யா ஜெட் விமானங்கள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹமோரியா நகரின் குடியிடுப்பு பகுதி மற்றும் சந்தை பகுதிகளை குறிவைத்து தாக்கியுள்ளனர். இதில் 17பேர் பலியாகிவுள்ளனர்.
அடுத்தப்படியாக அர்பின் என்னும் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டது அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 4பேர் பலியாகிவுள்ளனர் மற்றும் ஹரஸ்தா நகரில் 6பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை நடைப்பெற்று வருகிறது. பலரின் நிலைமை மோசமாவுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தாக்குதல் குறித்து சிரியா மற்றும் ரஷ்யா அரசு கூறியுள்ளது என்னவென்றால் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகளை குறிவைத்து தான் தாக்குதல் நடத்தினோம். பொதுமக்கள் மீது குண்டு வீசவில்லை என்று தெரிவித்துள்ளனர்.