ஆப்கானிஸ்த்தானில் குண்டுவெடிப்பு – 30 பேர் பலியாகிவுள்ளனர்

afghanistan bomb blast in kabul

ஆப்கானிஸ்த்தானில் நேற்று மசூதியில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் நடத்திய இந்த தாக்குதலில் 30பேர் பலியாகிவுள்ளனர். மேற்கு காபூலில் உள்ள மசூதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைலயில் கொண்டு சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் பலரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்த பொழுது பயங்கரவாதி கூட்டத்தில் ஒருவன் மசூதி உள்ளே சென்று தன் உடலில் கட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்க்கவில்லை. தலிபான் இயக்கம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.