தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அந்தமான் அருகே தென்மேற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தால்வு பகுதியால் இந்தியா பெருங்கடல் வரை மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த சுழற்சியின் காரணமாக தெற்கு பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. வருகிற 29-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
நேற்று பெய்த பலத்த மழையால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளன. ஜெர்மனியிலிருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பியனுப்பப்பட்டது.