சென்னையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்றில் நேற்று 300மைக்ரான் அளவுக்கு மாசு அதிகரித்துள்ளது என அமெரிக்க துணை தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாட்டாசு வெடிப்பதால் காசு மாற்று ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்தமுறை குறைந்த அளவில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன, ஆனாலும் இந்தமுறை தான் காற்றில் அதிகம் மாசு ஏற்பட்டுள்ளது. இதற்க்கு தரை காற்று வீசாததே காரணம் என அமெரிக்க துணை தூதரகம் தெரிவித்துள்ளது.