தளபதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தல ரசிகர்கள் – அதிர்ச்சியில் பாஜக

ajith fan raised voice to support mersal issue

விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளி அன்று வெளிவந்து பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தல ரசிகர்கள் மற்ற காமன் ஆடியன்ஸ் என அனைவர்களும் கவர்ந்துள்ளது மெர்சல் படம். இந்நிலையில் தற்பொழுது படத்தில் அமைந்திருக்கும் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் கூறியுள்ளனர்.

இதற்க்கு அஜித் ரசிகர்கள் , திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாஜகவினருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். படத்தில் அமைந்திருக்கும் காட்சி நாட்டின் நடப்பை கருத்தாக கூறப்பட்டது இதில் தவறு ஒன்றுமில்லை, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் நம் நாட்டில் உண்டு என விளக்கம் தெரிவித்துள்ளனர்.

பாஜகவினருக்கு எதிராக தற்பொழுது அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் பொதுமக்கள் என அனைவரும் சமூகவலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது #mersalvsmodi என்பது ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Tagged with:     , , , ,