அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் டீஸர் வெளியானது

தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் விவேகம். இப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்களாக நடைபெற்று வந்தது. அதுமட்டுமல்லாமல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்றபோது அஜித்தின் ஒரு புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்தது. வீரம் மற்றும் வேதாளம் படத்தை இயக்கிய சிவா மீண்டும் இப்படத்தை இயக்குகிறார்.

அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், தம்பி ராமைய்யா என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் டீஸர் நேற்று நள்ளிரவு வெளியானது. அஜித்தின் ஒரு புகைப்படம் வெளிவந்தாலே கொண்டாடும் ரசிகர்கள் அவர் நடித்த படத்தின் டீஸர் வெளியானால் சொல்லவா வேண்டும். இப்படத்தின் டீஸர் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதை பார்க்கும் போது விவேகம் டீஸர் கபாலி டீஸரின் சாதனையை முறியடித்துள்ளது.