இந்தியா முழுவதும் அணைத்து கிராமங்களிலும் இனி வைஃபை(WI-FI) வசதி

soon wifi is going to be placed in all villages in india

இந்தியா முழுவதும் அணைத்து கிராமங்களிலும் இனி வைஃபை(WI-FI) வசதி பொருத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அணைத்து கிராமங்களில் இன்டர்நெட் வசதி தேவையாக இருப்பதால் இந்த சேவையை தொடங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான வேலையை மத்திய அரசு தொடங்கியுள்ளது இந்த ஆண்டிற்குள் 1லட்சம் கிராமங்களில் வைஃபை(WI-FI) வசதி பொருத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 5.5லட்சம் கிராமங்களில் 2019ஆண்டிற்குள் வைஃபை(WI-FI) வசதி செய்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் காரணமாக இதை செயல் படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தொலைதொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தராஜன் இந்த திட்டத்திற்க்காக மத்திய அரசு ரூ3,700கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் வேகம் 1Gbps கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tagged with:     ,