சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்

சிங்கப்பூர் கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதியதில் 10 பேர் காணவில்லை. சிங்கப்பூர் கடல் வழியாக அமெரிக்காவின் ஜான் மெக்கென் என்ற போர் கப்பல் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. மலாக்கா தீவு அருகே சென்றபோது லிபியாவை சேர்ந்த அல்னிக் என்ற எண்ணெய் கப்பல் மீது பயங்கரமாக மோதியது. அந்த கப்பலில் 30 ஆயிரம் டன் எடை கொண்ட எண்ணெய் மற்றும் ரசாயனம் இருந்தது. இந்த மோதலில் அமெரிக்க போர்க் கப்பல் பலத்த சேதமடைந்தது. அதில் இருந்த 5 பேர் காயமடைந்தனர். 10 வீரர்கள் காணவில்லை.

கப்பல்கள் மோதியதால் அவர்கள் காயமடைந்து, கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். காணாமல் போன வீரர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். அமெரிக்கா, சிங்கப்பூர் மலேசிய விமானங்கள் மற்றும் கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இப்பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல் விபத்தில் சிக்குவது இது 2வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.