சில நாட்களுக்கு முன்பு ஆர்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது அவர் நண்பர்களிடம் தான் திருமணத்திற்கு தயார் ஆகிவருவதாக கூறியுள்ளார், அதற்காக பெண் தேடி கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அவர் கூறிய அந்த வீடியோ அவரது நண்பர்கள் மூலம் வெளியாகி வைரலாக பரவிவந்தது.
தற்பொழுது ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அது தன் நண்பர்கள் வியாட்டுத்தனமாக வெளியிட்ட வீடியோ, ஆனால் அதில் கூறப்பட்டிருக்கும் விஷயம் உண்மைதான். ஆம் தான் திருமணத்திற்கு பெண் தேடி கொண்டிருப்பதாக கூறியுள்ளார்‘. அந்த விடியோவுடன் அவரது தனிப்பட்ட மொபைல் எண்ணை கொடுத்துள்ளார். யாருக்கேனும் அவரை பிடித்திருந்தால் அந்த நம்பருக்கு அழைக்குமாறு கூறுயுள்ளார்.
Hi Friends ? Finally In search of my Life Partner ???#MySoulmate ❤️❤️❤️ pic.twitter.com/zq88lIoglY
— Arya (@arya_offl) November 21, 2017