விவகாரமான இயக்குனர் இயக்கத்தில் ஆர்யா – யார் அந்த இயக்குனர்?

arya next film

நடிகர் ஆர்யா கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்தது வருகிறார். அவர் தனது அடுத்த படத்தை எப்படியாவது வெற்றி படமாக்க வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளார். தற்பொழுது ஆர்யா தனது அடுத்த படத்திற்க்காக ஹரஹர மஹாதேவக்கி படத்தின் இயக்குனரான சந்தோஷ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமே அறிவித்துள்ளது.

இயக்குனர் சந்தோஷ் தற்பொழுது நடிகர் கெளதம் கார்த்திக் வைத்து இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற படத்தை இயக்கி வருகிறார். அதற்க்கு பின்பு ஆர்யாவுடன் தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயிஷா நடிக்கவுள்ளார்.