ஸ்மார்ட்போன்களில் வாழும் மூன்று நுண்ணுயிர்கள்

மக்கள் அனைவரும் டிஜிட்டல் இந்தியாவில் வாழ்த்து கொண்டுயிருக்கிறார்கள். அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது ஸ்மார்ட்போன். நம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது ஏற்கனவே வெளியான செய்தி. நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பாக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லிருக்கிறார்கள் .

இந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிர் கிருமிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.

நாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதை உறுதி படுத்தியுள்ளனர்.

கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பாக்டீரியா மற்றும் கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்த வரை நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்றாலும் , வாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என கூறப்படுகிறது. எனினும் ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்யும் போது அவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.  மேலும் தேவை உள்ளபோது மட்டும் எடுத்து உபயோகித்து விட்டு  அணைத்து வைப்பது எல்லாருக்கும்  நல்லது என்றும் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்

Tagged with:     ,