வெடித்து சிதறிய எரிமலை – மக்கள் பீதி

mount agung eruption

தென் கிழக்கு ஆசியா நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவிலுள்ள மவுண்ட் அகுங் எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

ஆயிரக்கணக்கான எரிமலைகள் உள்ள இந்தோனேஷியாவில் 120 எரிமலைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. இந்நிலையில் பாலி தீவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய குடா என்னும் இடத்திற்க்கு அருகே மவுண்ட் அகுங் எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த 54ஆண்டுகளுக்கு முன்பு வெடித்து. அப்பொழுது 7.5கி.மீ., தொலைவுக்கு நெருப்பு குழம்புகள் பரவியது. அந்த சம்பவதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எரிந்து சாம்பலாகினர்.

சமீபகாலமாக மவுண்ட் அகுங் எரிமலை மீண்டும் சீறத் தொடங்கியுள்ளது. கடும் சீற்றத்துடன், புகையுடன் கூடிய சாம்பல் வெளியேறி வருகிறது. இதையடுத்து எரிமலையின் சுற்று பகுதியிலுள்ள 22கிராமங்களில் வசிக்கும் 1லட்சத்துக்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பாலியிலுள்ள விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 55ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இந்த எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது, நெருப்பு குழம்புகளை ஆறாக பெருக்கெடுத்து கிராம பகுதிகளில் ஓடுகின்றன எரிமலை வெடித்த சத்தம் 12கி.மீ., தொலைவுக்கு கேட்டது. இந்தோனேஷியாவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.