பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது தோனியின் பெயர்

BCCI nominates award for dhoni

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம பூஷன் விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். இந்த வகையில் 2018ம் ஆண்டிற்க்கான பத்ம பூஷன் விருதுக்கான பெயர்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இதுவரை பிசிசிஐ எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் பரிந்துரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டால் இவர் விருது வாகும் 11வது நபராவார். இதுவரை சச்சின், கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ராகுல் ட்ராவிட், சாந்து போர்டே, டிபி தியோதர், சிகே நாயுடு, லாலா அமர்நாத், ராஜா பலிந்திரா சிங், விஜய ஆனந்த் ஆகிய 10 வீரர்கள் இதுவரை பத்ம பூஷன் விருது பெற்றுள்ளனர்.

Tagged with:     , , , ,