வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள்

வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றி சொன்னால், நம்பமாட்டீர்கள். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.

நாம் அனைவரும் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டு பழத்தின் தோலை எறிந்துவிடுவோம் அனால் அந்த தோல்பகுதியில் பல நல்ல பயன்கள் உள்ளன
“பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை அகற்றும்,முகபருக்களுக்கு மருந்தாக உள்ளது,கண்களின் கீழ் உள்ள கருவளையங்கள் நீர்க்க உதவும்,மூட்டு வலி பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்” இன்னும் பல நன்மைகள் தோல் பகுதியில் ஒளிந்து உள்ளன.