வாசனைக்காக மட்டும் மசாலா டீ மற்றும் பாயாசத்தில் நாம் சேர்த்து கொள்ளும் ஏலக்காயில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது நமக்கு தெரியுமா?
- ஏலக்காயை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும், செரிமான கோளாறு போன்ற பல பிரச்சனைககளுக்கு தீர்வு கிடைக்கும்.
- ஏலக்காயில் இருக்கும் கிருமி நாசினி வாய்ப்புண்களை அகற்ற உதவும். ஏலக்காயை அப்படியே வாயில் போட்டு மெல்வதன் மூலம் கூட செரிமான கோளாறை தடுக்க முடியும்.
- சுவாசம் மற்றும் மூச்சு குழாய் பிரச்சனைகளுக்கு ஏலக்காய் ஒரு நல்ல தீர்வாக அமையும்.
- இதய துடிப்பு சீராக துடிக்காமல் அவதி படுபவர்கள் தினமும் ஏலக்காயை நீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் சீர் படுத்த முடியும்.
- ஏலக்காயில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ரத்த சோவை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்.
இவற்றை தவிர மன அழுத்தம் குறைப்பது, ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை நீக்குவது, புற்று நோய் வராமல் தடுப்பது போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது ஏலக்காய். பொதுவாக தினந்தோறும் 3முதல் 4லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். வெறும் தண்ணீர் குடிக்காமல் இப்படி ஏலக்காய் கொதிக்க வைத்த நீரை குடித்தால் பல நன்மைகளை அதன் மூலம் பெறலாம் என்பது உருதி.