பாஸ்டன் டைனமிக்ஸின் அசத்தல் ரோபோ …!

கூகுள் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) மனிதன் போன்றே இரண்டு  கைகள், இரண்டு கால்கள். கால்களில் பாதங்களுக்கு பதில் இரண்டு சக்கரங்கள் என ஒரு அசத்தல் ரோபோவை உருவாக்கியுள்ளது.

இதற்கு ‘ஹேண்டில்'(Handle) என பெயர் சூட்டியுள்ளனர்.பெயருக்கு ஏற்றாற்போல் பொருட்களை தூக்கி வைக்க எளிதாக இதனால் முடியும்.இந்த ரோபோ படிக்கட்டுகள், பனி படர்ந்த பகுதி, புல்வெளி, கற்கள் மிகுந்த சமமற்ற சாலைகள் என எல்லா நிலப்பரப்பிலும் மிக எளிதாக பயணிக்கிறது.உயரமான தடைகளை மிக எளிதாக தாண்ட இதனால் முடியும்.

ஹேண்டில் ரோபோ மணிக்கு 14.5 கி.மீ வேகத்தில்  பயணிக்கும். இதன் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 24 கி.மீ தூரம் வரை செல்லும்.

இத்தனை திறமைகளை ஒருங்கே கொண்டிருக்கும் ஒரே மனித வடிவ ரோபோ, ‘ஹேண்டில்’தான் என்று ரோபோவியலாளர்கள், பாஸ்டன் டைனமிக்சை பாராட்டியுள்ளனர்.

Tagged with:     , , ,